×

இங்கி. பிரதமர் சுனக்கிற்கு முதல் சிக்கல் சுவெல்லா நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

லண்டன்:  சுவெல்லாவை மீண்டும் அமைச்சராக நியமித்த பிரதமர் சுனக்கிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இங்கிலாந்தில் லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மன்  உள்துறை அமைச்சராக இருந்தார். டிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 18ம் தேதி இவர் திடீரென ராஜினாமா செய்தார். இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். பதவி ஏற்ற சில மணி நேரத்தில் அமைச்சரவையை அவர் மாற்றி அமைத்தார். அதில், சுவெல்லா பிரேவர்மனை மீண்டும் உள்துறை அமைச்சராக நியமித்தார்.  இதற்கு எதிர்க்கட்சிகளான தொழிலாளர் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி போன்றவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து லிபரல் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சுவெல்லாவை நியமனம் செய்ததன் மூலபிரதமர் அலுவலகத்துக்கு கவுரவம் கேலிக்குரியதாகி இருக்கிறது. குற்றச்சாட்டின் கீழ் பதவியில் இருந்து விலகியவரை மீண்டும் அதே பதவியில் நியமிக்க முடியாது. இது குறித்து அமைச்சரவை  அலுவலகத்தால் விசாரிக்கப்பட வேண்டும்,’ என தெரிவித்தார். இதற்கிடையே, சுனக் தலைமையில் நேற்று முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. பின்னர், பிரதமரின் கேள்விகள் என்ற நிகழ்ச்சி நடந்தது. நாடாளுமன்றத்தில் அரை மணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி எம்பி.க்களின் கேள்விகளுக்கு சுனக் பதில் அளித்தார்.* மிகுந்த மகிழ்ச்சி சோனியா கடிதம்இங்கிலாந்து பிரதமராக பதவியேற்று உள்ள சுனக்கிற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுனக்கிற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எழுதி உள்ள கடிதத்தில், ‘இங்கிலாந்து பிரதமராக நீங்கள் பதவி ஏற்றுள்ளதின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் ஆழமாகும். நீங்கள் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கிடைத்த பெருமை. இந்தியா – இங்கிலாந்து உறவு எப்போதும் சிறப்பான வகையில் இருந்துள்ளது.  உங்களுடைய பதவி காலத்தில் அது மேலும்  அதிகரிக்கும் என நம்புகிறேன்,’ என்று கூறியுள்ளார்….

The post இங்கி. பிரதமர் சுனக்கிற்கு முதல் சிக்கல் சுவெல்லா நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sunak ,Suvella ,London ,Suella ,Liz Truss ,England ,Dinakaran ,
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...